இணையத்தை கலக்கும் ஜூனியர் ராக்கி பாய்.... தெறிக்கும் மீம்ஸ்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (09:45 IST)
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது. அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம்.  

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ் இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.  அதுமட்டுமின்றி  இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி  கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது.

இந்த படத்தின் தன்னை உலகறிய செய்த நடிகர் யாஷ் கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை மற்றும்  ஆயுஷ் என்ற மகன் உள்ளனர். தற்போது தனது மகனின் அழகிய புகைப்படத்தை யாஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவரது  ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்து ஜூனியர் ராக்கி பாய் வந்துட்டான் என மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்