Heart broken... நண்பர் மறைவிற்கு ரஜினிகாந்த் டிவிட்!!

வியாழன், 30 ஏப்ரல் 2020 (10:25 IST)
ரிஷி கபூர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார். 
 
பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். 
 
சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 
 
அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ரிஷி கபூர் காலமானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் தான் உடைந்து போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
இவரை தொடர்ந்து ரஜினிகாந்த், என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என ரிஷி கபூர் மறைவிற்கு ரஜினி டிவிட்டரில் இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்