ஒருபாலுறவு பெண்கள் ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிக்க அனுமதி

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (00:26 IST)

ஒருபாலுறவு பந்தத்தில் இருக்கும் பெண்களும், திருமணம் ஆகமலோ, மணமானபின் பிரிந்தோ தனியாக வாழும் பெண்களும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization) மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கும் சட்டத்தை பிரான்ஸ் இயற்ற உள்ளது.

43 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு இந்த அனுமதி பொருந்தும். பிரான்ஸ் சுகாதார இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.

இரண்டு ஆண்டுகால போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு பிறகு இந்தச் சட்டம் பிரான்ஸ் நாட்டில் அமலாக உள்ளது.

இத்தகைய சட்டம் ஏற்கனவே பிரிட்டன் மற்றும் பிற 10 ஐரோப்பிய நாடுகளில் அமலில் உள்ளது.

சட்டம் அனுமதிக்காததால் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள பல பிரெஞ்சு பெண்கள் அதிகம் செலவு செய்து பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் சென்று வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்