''சிங்கப்பெண்'' ஆனி சிவா ! உழைப்பால் உயர்ந்தவர்...

செவ்வாய், 29 ஜூன் 2021 (19:53 IST)
ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட்ட பலவேலைகளைச் செய்து தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கடினமாகப் படித்து உழைத்து அதே ஊரில் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார் ஆனி சிவா.

சினிமாவில் நடப்பது போன்ற உண்மையில் சாதித்துக் காட்டியுள்ளார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிங்கப்பெண் ஆனி சிவா.

கேரளா மாநிலம் வர்க்கலா என்ற பகுதியில்  வசித்து வருபவர் ஆனி சிவா. இவருக்குத் திருமணம் ஆகி  6 மாதக் கைக்குழந்தை இருந்தபோது,  அவரது கணவர் அவரை வீட்டை விட்டுத் துரத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் துக்கம் ஒருபக்கம் இருந்தாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு வேலை செய்து, படித்து ஒரு அரசு உத்தியோகம் பெற வேண்டுமென வைராக்கியமாக உழைத்தார் ஆனி சிவா.

இவரது உழைப்புக்குச் சமீபத்தில் பலன் கிடைத்தது. ஆம் இவர் ஐஸ்கிரீம், குளிர்பானம் உள்ளிட்ட பலவேலைகளைச் செய்து தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றிக் கடினமாக உழைத்த அதே ஊரிலேயே காவல ஆய்வாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்