கல்லூரிக்கு பேருந்தில் வரும் மாணவர்களில் எந்த குழுவை சேர்ந்த மாணவன் `ரூட்டு தல'யாக இருக்கவேண்டும் என்பதில் வன்முறை ஏற்பட்டு தமிழ் நாட்டில் சர்ச்சையானது.
கடந்த மாதம் நடந்த இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர், ரூட்டு தல பிரச்சனையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பான பிற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
ரூட்டு தல: தலைமைப் பண்புக்காக தரம் தாழ்ந்த புரட்சியா?
இதன்மூலம் எதனை நிரூபிக்க விரும்புகிறார்கள், ரூட்டு தலயாக இருந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்க பிபிசி தமிழ் அவர்களை தேடி சென்றது.