தமிழகத்துக்கு முதலீடுகள் திரட்டுவதற்க்காக முதல்வர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் ஜெயக்குமார் : ஸ்டாலினைப்போல் சொத்து வாங்க முதல்வர் வெளிநாடு செல்லவில்லை என கூறியுள்ளார்.
இன்று சென்னை ராயபுரத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் மக்களிடம் குறைகளைக் கேட்டாறிந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்திற்கு வெளிநாட்டு பெரு நிறுவனங்களின் முதலீடுகள் தேவைப்படுகிறது. அந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகத்தான் முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் . அதேசமயம் திமுக தலைவர் ஸ்டாலினைப்போல் சொத்து வாங்க முதல்வர் வெளிநாடு செல்லவில்லை என விமர்சித்திருந்தார்.
இதற்கு முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனது வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்துகிடக்கின்ற மர்மங்களை உணமையாக காரணங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.