சாலையில் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் இடைநீக்கம் - கல்லூரி முதல்வர்

புதன், 24 ஜூலை 2019 (15:51 IST)
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் ,பட்டா கத்தியுடன்  மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்களை இடைநீக்க  செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல்கள் அதிமாகி கொண்டு வரும் நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். 
 
அப்போது இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை  எடுத்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவரை தாக்கிகொண்டனர். இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
 
இந்த மோதலை பற்றி தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர். இந்த மோதலில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த மாணவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,.

இந்த மோதலில் கடுமையாக காயம் அடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால், அரும்பாக்கம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்த்தியது.
 
இதுகுறித்து இன்று பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழிச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது, பேருந்தில் பட்டாக்கத்தியுடன் 2 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்ட்டுள்ளனர். மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். பச்சையப்பன் கல்லூரில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படுவதில்லை. மாணவர்களின் செயல்களுக்கு அவர்களின் குடும்ப சூழல்களே முக்கிய காரணம் .
 
மேலும் மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு வருவதில்லை. மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு மனநல கவுன்சில் வழங்கப்படுகிறது,
மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்