இனிமேலும் எவரும் உயிருடன் மீள வாய்ப்பில்லை

Webdunia
சனி, 2 மே 2015 (19:41 IST)
நேபாளத்தை பெரும் நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இனிமேலும் உயிருடன் எவரும் மீட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 
பலியானோரின் எண்ணிக்கை 6600 ஐ தாண்டியுள்ளதாக நேபாள உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 
14000 பேர் காயடைந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
 
பாதைகள் மூடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு உதவிப்பணிகள் இதுவரை சென்றடையவில்லை. பெருமளவு சர்வதேச நிவாரணப் பொருட்கள் தலைநகர் காத்மண்டுவில் தேங்கிக் கிடக்கின்றன.
 
நேபாள அரசாங்கம்மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முடிந்தவரை மேற்கொண்டுவருவதாக கறுகின்றது.
 
அதேநேரம், நிவாரணப் பொருட்களில் வந்துள்ள டூனா (மீன்), மயோனீஸ் (சுவையூட்டி) போன்ற சில உணவுப் பொருட்களால் பலனில்லை என்றும் நேபாள அரசாங்கம் கூறுகின்றது.