வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

Siva

செவ்வாய், 21 மே 2024 (07:17 IST)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை  மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மேலும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டு வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதுமே மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் சுத்தமாக இல்லை என்றும் பொதுமக்கள் தற்போது நிம்மதியாக குளிர்ச்சியான தட்பவெப்ப இட்நிலையை அனுபவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்