இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ஊடுருவலை முறியடித்த பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:44 IST)
பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
 
அமைதியின் மீதான பாகிஸ்தானின் நாட்டம் காரணமாக அந்த இந்திய நீர்மூழ்கியைத் தாங்கள் தாக்கவில்லை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
மேலும், தங்கள் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கடற்படைக்கு உள்ள வலிமையைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார் என்கிறது ரேடியோ பாகிஸ்தான்.
 
இந்தியாவும் பாகிஸ்தானும் மாற்றி மாற்றி எல்லையைத் தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய ஒரு வார காலத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் எல்லை தாண்ட முயன்றதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
மேலும், இந்திய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் கடல் ஊடுருவ முயல்வதைக் காட்டும் காட்சி என்று கூறி ஒரு காணொளியையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்