பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த பில்கேட்ஸ்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:36 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருக்கும் பில்கேட்ஸை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பல சாதனைகளுக்கு மட்டுமின்றி, அவரது தொண்டுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

போலியோவை ஒழிப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு, எனது நாட்டின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்", என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்