வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் !!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (17:13 IST)
உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் வலுப்படுத்தக் கூடியது வஜ்ராசனம் ஆகும். இடுப்புப் பகுதி தசையை வலுப்படுத்தும் வஜ்ராசனம்.


செய்முறை:

வஜ்ராசனம் செய்ய முதலில் தரை விரிப்பில் உட்கார்ந்து மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கால்களில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் முழங்கால்களுக்கு இடையில் நான்கு விரல்கள் இடைவெளி விட்டு உங்க குதிகாலில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள். இரு கால்களின் தொடைகளும் முறையே உங்கள் கால்களில் ஓய்வெடுக்க வேண்டும். இரு கால்களின் பெருவிரலும் ஒன்றுக்கொன்று தொட வேண்டும்.

உங்கள் கைகளை உங்கள் முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முதுகை நேராக வைத்து உங்கள் பார்வையை நேராக முன்னோக்கி பாருங்கள். தலை நேராகவும், கன்னம் ஆனது தரைக்கு இணையாகவும் இருக்க வேண்டும். உங்கள் நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் மெதுவாக காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். உங்கள் கவனம் முழுவதும் சுவாசத்தில் இருக்க வேண்டும்.

5 முதல் 10 நிமிடங்கள் இதே நிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் படிப்படியாக ஒரு நாளைக்கு சுமார் 30 நிமிடங்கள் இந்த யோகாவை செய்யலாம்.

உங்களுக்கு முழங்கால் வலி இருந்தாலோ அல்லது முழங்கால் அறுவை சிகிச்சை செய்து இருந்தாலோ வஜ்ராசனம் செய்வதை தவிருங்கள். குடலிறக்கம் மற்றும் குடல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் யோகா பயிற்சியாளரின் உதவியுடன் வஜ்ராசனம் செய்வது நல்லது.

பயன்கள்:

வஜ்ராசனம் நம் செரிமானத்தை அதிகரிக்கிறது, தொப்பையை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வஜ்ராசனம் செய்து வரலாம்.

நம்மை அமைதியாக வைக்கவும், மன அழுத்தம், பதட்டம் இவற்றை குறைக்கவும் உதவுகிறது.

இரவில் நல்ல தூக்கத்தை தரவும் தூக்க தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இடுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இடுப்புப் பகுதி தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

பிரசவத்த பிறகு பெண்களுக்கு சிறுநீரை அடக்க முடியாத தன்மை இருக்கும். அந்த மாதிரியான சிறுநீர் அடங்காமையை போக்க உதவுகிறது.

நமது கீழ் முதுகின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்