தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 'வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்' என்பது வாக்குரிமையைப் பறிக்கும் சதியாக இருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். "பீகாரில் நடந்தது போல, தோல்வி உறுதி என்றால் வாக்காளர்களை நீக்கும் முயற்சியை இங்கு செய்யப் பார்க்கிறார்கள்" என்று பா.ஜ.க.வை அவர் மறைமுகமாக சாடினார்.
இந்த திருத்த நடவடிக்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்ப்பதாகவும், இது குறித்து நவம்பர் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். "வாக்கு திருட்டை முறியடித்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காப்போம்" என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.