இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று அம்பாலா விமானப்படை தளத்தில், ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிடம் பயணித்த பிறகு, ஸ்க்வாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங்குடன் காணப்பட்டார். இந்த நிகழ்வு, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரஃபேல் விமானி சுட்டு வீழ்த்தப்பட்டு பிடிபட்டதாக பாகிஸ்தான் பரப்பிய பொய் பிரச்சாரத்தை முறியடித்துள்ளது.
இந்திய விமான படையின் ஷிவாங்கி சிங், இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லியமான ஆபரேஷன் சிந்தூர் ரஃபேல் விமானத்தை ஓட்டியவர் ஆவார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது, இந்தியா ஒரு ரஃபேல் உட்பட பல போர் விமானங்களை இழந்ததாகவும், விமானத்திலிருந்து வெளியேறிய ஷிவாங்கி சிங் சியால்கோட் அருகே பிடிபட்டதாகவும் பாகிஸ்தான் ஒரு தவறான தகவலை பரப்பியது.
இந்தநிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஷிவாங்கி சிங்குடன் ரஃபேல் விமானத்தில் பயணித்ததன் மூலம், பாகிஸ்தானின் அனைத்து பொய் தகவல்களுக்கும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.