1.66 கோடி பாதிப்பு, 1.02 கோடி குணம்: குறைகிறதா கொரோனாவின் தாக்கம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (06:46 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் வேகமாக பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது
 
உலக அளவில் 1.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1.02 கோடி ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவிற்கு 6.55 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 60,712 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும், அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 60,712 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவிற்கு நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.42 லட்சத்தை கடந்தது. 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,482,503 என்றும் பலியானோர் மொத்த எண்ணிக்கை 33,448 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்