75 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை: கொரோனாவின் கொர பிடியில் உலகம்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (12:29 IST)
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியது.

கடந்த சில மாதங்களில் உலகையே முடக்கியுள்ள கொரோனா பல லட்சக்கணக்கான மக்களை தாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இத்தாலியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,32,547 ஆக உள்ள நிலையில் உயிரிழப்புகள் 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பெயினில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், பிரான்சில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு 3 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் மாகாணத்தில் 3,500 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்