அடிக்கிற வெயில்ல 21 நாள்னா சும்மாவா..? காவலர்களுக்காக ஈபிஎஸ்!!

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (11:55 IST)
காவலர்களும் மனிதர்கள் தானே, மக்கள் மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. 
 
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் போதும் மக்கள் ஆங்காங்கே வெளியே வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இதனால் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டிருப்பதாவது, அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்கள் நலன் கருதி தான் என்பதை மக்கள் உணர வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நோயினுடைய தன்மையை, தாக்கத்தை உணர்ந்து, தடை உத்தரவை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.
 
இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21 நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது, குடும்பத்திற்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்