இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்: பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:54 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் பாகிஸ்தானும் திவால் ஆகிவிடும் என உலக பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
பாகிஸ்தானில் தற்போது விலைவாசி உயர்வு 23 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கோதுமை உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இலங்கைக்கு நேர்ந்த நிலை தான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது என்றும் விரைவில் இலங்கை போலவே பாகிஸ்தான் திபால் ஆகும் நிலை ஏற்படும் என்றும் பொருளாதார அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். 
 
இந்த நிலையில் சர்வதேச நிதியைத்திடம் 650 கோடி டாலர் பாகிஸ்தான் கடனாக கேட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேறு வழியில்லாததால் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்