அமெரிக்காவில் தான் வாங்கிய லாட்டரி சீட்டை சரியாக சுரண்டி பார்க்காமல் 7 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கீழே போட்டு சென்றுள்ளார் ஒரு பெண்.
அமெரிக்காவில் மசாசூசெட்சில் அபிஷா என்ற இந்திய வம்சாவெளி ஒருவர் லாட்டரி சீட்டுகளை விற்கும் கடைகளை வைத்திருக்கிறார். அவரிடம் லீ ரோஸ் பீகா என்ற அமெரிக்கர் ஒருவர் லாட்டரி வாங்கியுள்ளார். வாங்கிய அவர் அதை சுரண்டிய போது முழுவதுமாக சுரண்டாமல் பாதி சுரண்டிய நிலையில் தனக்குப் பரிசு விழவில்லை என்று நினைத்து கடையிலேயே லாட்டரியை போட்டு சென்றுள்ளார்.
பின்னர் ஒருநாள் கடையில் கிடந்த லாட்டரிகளை அப்புறப்படுத்தும் போது சரியாக சுரண்டாத லாட்டரியை முழுவதும் சுரண்டி பார்த்துள்ளார் அபிஷா. இதையடுத்து அந்த லாட்டரி சீட்டை சம்மந்தப்பட்ட லீ ரோஸிடம் அதை ஒப்படைத்துள்ளார் அவர். இதையடுத்து பலரும் அபிஷாவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.