தென்னாப்பிரிக்காவில் பிணவறையில் சடலமாக இருந்த நிறைமாத கார்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவம் ஏற்பட்டது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தயிஸி கிராமத்தை சேர்ந்த 33 வயதான டோயி என்ற பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
இதனையடுத்து அவரது உடல் இறுதி சடங்கு செய்யப்பட்டு சடலங்களை அடக்கம் செய்வோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பிணவறையில் வைத்த அந்த பெண்ணின் சடலத்தை புதைக்க வெளியே எடுத்தனர். ஆனால் அப்போது அந்த பெண்ணின் கால்களுக்கு இடையே பிறந்த குழந்தை ஒன்று இறந்தநிலையில் கிடந்தது.
இதனை பார்த்து பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தாய் உள்ளிட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் இது தீய சக்தியின் வேலையாகத்தான் இருக்கும், இறந்த ஒருவர் எப்படி பிரசவிக்க முடியும் என சந்தேகத்தில் குழம்பினர்.
ஆனால் மருத்துவர்கள் இதுகுறித்து கூறியபோது, இறந்த உடலின் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டாலோ அல்லது இறந்த பின்னர் நடக்கும் தசை தளர்வாலோ குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம், இது இயற்கையான நிகழ்வு தான் என தெரிவித்தனர்.