அபிநந்தனுடன் வந்த பெண் யார்? வழக்கம் போல் சொதப்பிய சமூக வலைத்தள போராளிகள்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (09:59 IST)
பாகிஸ்தான் ராணுவத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் நேற்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
 
இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அபிநந்தனுடன் ஒரு பெண் இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. வழக்கம்போல் சமூக வலைத்தள போராளிகள் அந்த பெண் அபிநந்தனின் மனைவி என்றும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்றும் தங்கள் இஷ்டம் போல் கருத்துக்களை ஆர்வக்கோளாறில் பதிவு செய்தனர்.
 
ஆனால் உண்மையில் அவர் ஒரு பாகிஸ்தான் அதிகாரி. அபிநந்தனை அழைத்து வந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி.  இவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவின் இயக்குநராக இவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்