உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்போதைக்கு மருந்து கண்டுபிடிக்காத சூழலில் மக்களை தனிமைப்படுத்துவது ஒன்றே கொரோனா பரவுவதை தடுக்கும் ஒரே வழியாக உள்ளது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கு பிறப்பித்து வீடுகளில் மக்களை இருக்க சொல்லி இருக்கிறார்கள்.
உலகமெங்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஊரடங்கினால் மட்டும் கொரோனாவை அழித்துவிட முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ”கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு சிறந்த நடவடிக்கைதான் என்றாலும் இதனால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. இதை பயன்படுத்தி நாடு முழுவதும் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.