அடிக்கடி சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க #Ask என்ற ஹேஷ்டேகை பயன்படுத்துவது வழக்கம். தற்போது நடிகை சாயிஷா இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தியுள்ளார். வனமகன், காப்பான் போன்ற படங்களில் நடித்த சாயிஷா கடந்த ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.