ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை ஏற்க வேண்டும்- ஐநா பொதுச்செயலாளர்

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (20:56 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளை தாலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அதிபர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே அந்நாட்டில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. அங்குள்ள மக்கள் தம் சொந்த நாடுகளுக்குச் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஆப்கானில் இருந்து  வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனிடா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிப்பதாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம் ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை  மற்ற நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்