புறப்பட்டது இந்திய விமானம்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (20:43 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதிகளை தாலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அதிபர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே அந்நாட்டில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், அந்த நாட்டிலுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஏற்கனவே இந்தியாவிலிருந்து சென்ற விமானம் அங்கிருந்து சுமார் 129 பேரை பத்திரமாக அழைத்து வந்தது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று பிற்பகல் 12:20 மணிக்கு இந்திய விமானப்படையில் சி-17 ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.500 மேற்பட்டோரை இந்தியா அழைத்துவர திட்டமிட்டுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் நாடு திரும்பும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்