இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

Mahendran

திங்கள், 7 அக்டோபர் 2024 (12:10 IST)
மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் டெல்லிக்கு நேற்று வருகை தந்தனர். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய மாலத்தீவு அதிபர் அதன்பின் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மறைந்த மோடியை சந்தித்தார். 
 
இதனை தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் மற்றும் இந்திய பிரதமர் ஆகிய இருவரும் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும், குறிப்பாக மாலத்தீவுக்கான கடன் உதவி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. 
 
சீன ஆதரவு தலைவர் என்று கூறப்படும் மாலத்தீவு அதிபர், சமீபத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவுடன் அவர் நட்புறவை பாராட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்