அஜர்பைஜான் விமானத்தை தாக்கியது ரஷ்ய ஏவுகணையா? - ரஷ்யா அளித்த விளக்கம்!

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (11:38 IST)

அஜர்பைஜான் நாட்டில் விமானம் விபத்திற்குள்ளானதில் 38 பேர் பலியான நிலையில், இதற்கு ரஷ்ய ஏவுகணை விமானத்தை தாக்கியதே காரணம் என கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

 

 

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் எம்பயர் 190 விமானம் நேற்று முன் தினம் ரஷ்யாவின் க்ரோஸ்னி என்ற இடத்திற்கு சென்றபோது மோசமான வானிலை காரணமாக 3 இடங்களில் திருப்பி விடப்பட்டு கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் விமான நிலையத்திற்கு திசை மாற்றிவிடப்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே சென்றபோது விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் ஐந்து விமான பணியாளர்கள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 28 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

 

இந்நிலையில் உயிர் பிழைத்தவர்கள் கிரோஸ்னி விமான நிலையத்தில் தரையிரக்க வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட சிறிது நேரத்தில் வெளியே வெடிச்சத்தம் கேட்டதாக கூறியுள்ளார்கள். தற்போது ரஷ்யாவின் க்ரோஸ்னி பகுதியில் உக்ரைன், ரஷ்யா இடையே சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ட்ரோன் விமானத்தின் பின் இறக்கையை தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான தடயங்களும் விமானத்தின் சிதிலங்களில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இதுகுறித்து ரஷ்ய க்ரிம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், நாங்கள் இதுபோன்ற மோசமான ஒன்றை எப்போதுமே செய்ய மாட்டோம். விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்களை பரப்பாதீர்கள் என கூறியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்