இந்நிலையில் சமீப காலமாக ரஷ்ய ராணுவத்திற்கும், வாக்னர் குழுவிற்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளது. இந்நிலையில்தான் வாக்னர் குழு ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ள ரோஸ்டோவ் ஆன் டோன் பகுதியை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.
அதனை தொடர்ந்து வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும், கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் ரஷ்ய அரசு உத்தரவிட்டது. இதனால் வாக்னர் குழுவுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது வாக்னர் குழு ரோஸ்டோவ் ஆன் டோன் பகுதியில் இருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாக்னர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.