உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால்..ரஷ்யா எச்சரிக்கை!

வியாழன், 19 ஜனவரி 2023 (22:59 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் போரிட்டு தொடர்ந்து தாக்குல்  நடத்தி வருகிறது.

இதற்கு உக்ரைன் நாடும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தி வரும் இரு நாடுகளுக்கு இடையேயான போரில் இதுவரை பல ஆயிரக்காணக்கான போர் வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள்  பலியாகியுள்ளனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத தடவாடங்களும், நிதி உதவியும் செய்து வருகின்றன. இதற்கு ரஷ்ய நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, ரஷியாவை எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கு  மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி கூறியுள்ளதாவது: ரஷியா கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் இருந்து இணைத்த பகுதிகள், மற்றும் கிரிமியா தீபகற்பத்தைக் குறிவைத்து தாக்குல் நடத்தினால், இதற்கான பின்விளைவுகளை சந்திக்க  நேரிடும் என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் இப்போர் குறித்து நாளை தன்  நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தை  நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்