காதலர் தினத்தின் போது மாத்திரைகளை பரிசாக வழங்கிய அரசு: என்ன மாத்திரை தெரியுமா??

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (16:30 IST)
நேற்று முந்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் என்பது காதலர்களுக்கு மட்டும் அல்லாமல் தம்பதியினரும் கொண்டாடினர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில் வாழும் தம்பதியினருக்கு அந்நாட்டு அரசு வழங்கிய பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆம், தாய்லாந்து நாட்டில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக அந்நாட்டில் வாழும் தம்பதியினருக்கு வைட்டமின் மாத்திரைகள் அரசால் வழங்கப்பட்டது. தாய்லாந்தில் மக்கள் தொகை குறைந்துவருவதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 
 
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக வருத்தப்பட்டு வரும் நிலையில், தாய்லாந்தில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் வருத்தத்துடன் இம்மாதிரி முடிவுகளில் ஈடுபட்டுள்ளது. 
 
கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் தம்பதியினர் 6 குழந்தைகள் பெற்று வந்த நிலையில், இந்த விதிகம் தற்போது பெரும் அளவு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்