600 முறைக்கு மேல் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயன்ற அமெரிக்கா

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (18:10 IST)
கியூபாவை இன்றுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாத்தியத்திடம் இருந்து தனது தேசத்தை கட்டிக்காப்பாற்றி வந்த பெருமை கியூபாவின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.


 

சே குவேரா உள்ளிட்ட பல தென் அமெரிக்கா நாடுகளின் இடதுசாரி தலைவர்களையும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு அமைப்பான சிஐஏ-வும் படுகொலை செய்து தனது ஏகாதிபத்திய வெறியை தீர்த்துக்கொண்டுள்ளது.

ஆனால், அவர்களால், எத்தனையோ சதிகளுக்கு மத்தியிலும் கியூபாவை தனது கொடிய அணு குண்டுகளாலோ, போர் பயங்கரவாதத்தாலோ அதன் நிழலைக்கூட அசைத்துக்கூட பார்க்க முடியாததற்கு ஒரே காரணம், அந்த தேசத்தின் நாயகன், மக்களின் ஆதர்ஷமாகவும், ஒரே மந்திரமாகவும் இன்றளவும் திகழ்ந்து வரும் ஃபிடல் காஸ்ட்ரோதான்.

இதனால், ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதென அமெரிக்க ஏகாதிபத்தியம் முடிவெடுத்தது. காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.

பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது.

அதில் முக்கியமானவை, பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது.

பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த திட்டங்கள் குறித்த செய்திகள் எல்லாம் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்