பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் இந்த சுற்றுப்பயணத்தின் போது ரஷ்யர்ப அதிபர் புதினுடன் உக்ரைன் போர் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி ஜூலை எட்டாம் தேதி ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினுடன் இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் சில முக்கிய விஷயங்கள் பேச இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா கடந்த சில மாதங்களாக போரில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த போரை நிறுத்த புதினுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுடனும் இந்தியா நட்புறவுடன் இருக்கும் நிலையில் இந்த போரை இந்தியா பிரதமரால் நிறுத்த முடியும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.