78 லட்சமாக உயர்ந்த உலக கொரோனா தொற்று: 1 கோடியை நெருங்குவதால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (07:06 IST)
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78,59,557 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,168 ஆக அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40,35,421ஆக உயர்வு எனவும அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரேசிலில் ஒரே நாளில் 20,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,796 ஆக அதிகரிப்பு எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 890 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை அந்நாட்டில் 42,791 ஆக உயர்வு என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்
 
அதேபோல் அமெரிக்காவில் ஒரே நாளில் 25,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,42,224 ஆக அதிகரிப்பு என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 702 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,17,527 ஆக உயர்வு என அமெரிக்க சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 520,129 என்பதும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,829 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 321,626 என்பதும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,199 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்