தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப்! ஜோ பிடன் ஆட்களுடன் மோதல்! – கலவரமான அமெரிக்கா!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (08:34 IST)
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ஜோ பிடனின் இந்த வெற்றிக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார் அதிபர் ட்ரம்ப்.

இந்த நிலையில் ஜோ பிடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ”தேர்தல் வாக்குகளை திருடாதீர்கள்” என்ற வாசகத்துடன் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஜார்ஜியா, வாஷிங்டன், மிச்சிகன், அரிசோனா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், ஜோ பிடன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்த பகுதிகளில் போலீஸார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலவரக்காரர்களை அடக்க முயற்சித்து வருகின்றன. இந்த இருதரப்பு மோதலால் அமெரிக்காவின் பல நகரங்கள் கலவர பூமியாக காட்சியளிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்