ஆக்ஸிஜன் சிலிண்டர், டெஸ் கிட் தயார்! – இந்தியா புறப்பட்ட அமெரிக்க கப்பல்!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:25 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையான மருத்துவ உதவிகளை அமெரிக்கா கப்பல் மூலமாக அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள நிலையில் அமெரிக்காவும் உதவி செய்வதாக அறிவித்திருந்தது. அதன்படி 440 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 9 லட்சத்திற்கும் அதிகமான துரித பரிசோதனை கருவிகளை கப்பல் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்