இந்தியாவுக்கு உதவியே தீரணும்; அவசர சேவை விமானத்தை அனுப்பும் ரஷ்யா!

வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:54 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அவசர சேவைகளுக்கான விமானத்தை இந்தியா அனுப்புவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள நிலையில் ரஷியாவும் தேவையான உதவிகளை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய வெளியுறவு துறை அறிவிப்பில் “இந்திய – ரஷ்ய கூட்டுறவு அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ரஷ்யா உதவும். இதற்காக ரஷ்யாவின் அவசர சேவை விமானத்தை இந்தியாவுக்கு அனுப்பு ரஷ்ய தலைமை முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள், ஆக்ஸிஜன் எந்திரங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவை அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்