சொமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்பும் அமெரிக்கா! – ஜோ பைடன் உத்தரவு!
செவ்வாய், 17 மே 2022 (08:50 IST)
முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில் சொமாலியாவில் இருந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார் தற்போதைய அதிபர் ஜோ பைடன்.
சொமாலியாவில் அல் அஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அல் கொய்தாவின் ஆதரவு அமைப்பு ஆகும். இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைக்காக அமெரிக்க படைகள் சொமாலியாவில் இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ட்ரம்ப் ஆட்சியில் இருந்தபோது அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனால் தற்போது சொமாலியாவில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சொமாலியாவில் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த மீண்டும் அமெரிக்க படைகள் சொமாலியாவிற்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.