தமிழில் வாய்ப்புக் கிடைக்காத இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிகர் ஆதி நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
இதையடுத்து லிங்குசாமி அடுத்து இயக்கும் திரைப்படத்தில் புஷ்பா பட கதாநாயகன் அல்லு அர்ஜுன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொலல்ப்படுகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.