பறக்கும் தட்டுகள் குறித்து வெளிவரும் ரகசியங்கள்! – அமெரிக்காவில் நடைபெறும் வழக்கு!

ஞாயிறு, 15 மே 2022 (15:42 IST)
பறக்கும் தட்டுகள் குறித்த சர்ச்சை பல நாட்களாகவே உலகம் முழுவதும் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இதுகுறித்த வழக்கு விசாரணை ஒன்று நடைபெற உள்ளது.

மனிதன் அறிவு வளர்ச்சியை எட்டிய காலம் முதலிருந்தே தம்மை போல வேறு உலகங்கள், வேற்று உலக ஜீவராசிகள் இருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து சிந்தித்து வருகிறான். ஏலியன் எனப்படும் வெளிக்கிரக உயிரினங்கள் குறித்து உலக மக்களிடையே நீண்ட காலமாக பல்வேறு நம்பிக்கைகள், கட்டுக்கதைகள், விவாதங்கள் நடந்து வருகின்றன.

அமெரிக்காவில் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக ஆண்டுதோறும் பல புகார்கள் வந்த குவிந்தபடி உள்ளன. இந்நிலையில் பொதுமக்களிடையே பறக்கும் தட்டுகள் குறித்த தகவல்களை அளிக்கவும், புரிய செய்யவும் ஒரு வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இந்தியானா மாகாண பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் மே 17ம் தேதி நடக்கும் இந்த வழக்கு விசாரணையில் பறக்கும் தட்டுகள் குறித்து இதுவரை கிடைத்துள்ள தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் அவை உண்மையா என்பது குறித்து பல துறை வல்லுனர்களும் பல்வேறு விளக்கங்களை அளிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்