சிறுமி சுட்டுக்கொலை; குற்றவாளியை பிடிக்காமல் இல்லை ஓய்வு! – அமெரிக்காவில் பயங்கரம்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (11:34 IST)
சிறுமியை சுட்டுக்கொன்ற குற்றவாளியை பிடிக்காமல் ஓயமாட்டேன் என சிகாகோ போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவிட்டதாக தொடர் குற்றசாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 வயது சிறுமி ஒருவர் தனது பாதுகாவலருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு கடையிலிருந்து வெளிவந்த இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது குறி தவறி குண்டு சிறுமியின் தலையில் பாய்ந்தது. இதனால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் சிகாகோ நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுட்டுவிட்டு தலைமறைவான நபரை போலீஸார் தேடி வருகின்றனர். குற்றவாளியை பிடிக்காமல் தான் ஓயப்போவதில்லை என சிகாகோ நகர காவல் ஆணையர் டேவிர் ப்ரவுன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்