இறுதி கட்டத்தை நெருங்கியது கொரோனா மருந்து! – 30 ஆயிரம் பேரிடம் சோதனை செய்ய திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (12:56 IST)
ஜெர்மன் – அமெரிக்கா மருந்து நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோன தடுப்பு மருந்தின் இறுதி கட்ட பரிசோதனையை 30 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல மாதங்களாக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்பலனாக ரஷ்யா, இலண்டன் உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக ஜெர்மந் அமெரிக்க கூட்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜெர்மனியின் பயோஎண்டெக் நிறுவனமும், அமெரிக்காவின் பிஃபிசர் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிப்பதில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தன. இதற்கான இறுதி கட்ட சோதனையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனங்கள், இறுதிக்கட்ட பரிசோதனையை உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 120 பகுதிகளில் 30 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அமெரிக்க மடெர்னா மருந்து நிறுவனமும் 30 ஆயிரம் பேரிடம் சோதனைகள் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்