நேற்று தமிழகத்தில் 6,993 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,993 பேர்களில் 1,138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (30 ஆம் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.