உலகில் தற்போது 6 கண்டங்கள் உள்ளது. அது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகியவை ஆகும். தற்போது புதிதாக மேலும் ஒரு புதிய கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கண்டம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் உள்ளது. அதாவது தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டத்துக்கு ‘ஷிலாண்டியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவை ஆஸ்திரேலியாவின் மூன்றில் 2 மடங்கு அதிகம். அதாவது 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஷிலாண்டியா கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கிறது. அதன் அளவு 94 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.
விஞ்ஞானிகள் புவியியல் அமைப்பை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த செய்தி அமெரிக்க ஆராய்ச்சியியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.