திருப்பி அடிக்க தொடங்கிய உக்ரைன்! – அதிர்ச்சியில் ரஷ்யா!

வியாழன், 17 மார்ச் 2022 (09:15 IST)
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு மாத காலம் நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தாக்குதல் நடத்தி கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் இறந்துள்ள நிலையில், பலர் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அகதிகளாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றி அங்குள்ள விமான நிலையத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்திய உக்ரைன் கெர்சன் விமான நிலையத்தில் இருந்த ரஷ்ய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ரஷ்ய படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்