ரஷ்யாவிடம் பிடிபட்ட உக்ரைன் மேயர் மீட்பு!

வியாழன், 17 மார்ச் 2022 (07:44 IST)
ரஷ்யாவிடம் பிடிபட்ட உக்ரைன் மேயர் மீட்பு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மேயரை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் நாட்டிலுள்ள மெலிடோபோல் என்ற நகரத்தின் மேயராக இவான் ஃபெடோராவ் என்பவர் இருந்த நிலையில் அவர் ரஷ்ய படைகளால் கடந்த வாரம் பிடிக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் அவரை விடுவிக்க வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்தும் ரஷ்யாவிடமிருந்து அவர் மீளவில்லை.
 
 இந்த நிலையில் தங்கள் வசமிருந்த 9 ரஷ்ய வீரர்களை உக்ரைன் விடுவித்ததை அடுத்து மெலோடோபல் மேயர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
ஒரே ஒரு மேயரை மீட்க ரஷ்யாவின் ஒன்பது வீரர்களை உக்ரைன் விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்