ராணுவதளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு: உக்ரைன்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (09:02 IST)
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம். 

 
ரஷ்யா - உக்ரைன் மத்தியில் ஏற்பட்டுள்ள போர் உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் தலைநகர் கீவ்வில் ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு என உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்