உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஜெலன்ஸ்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 13 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர்.
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டு தப்பி சென்றுவிட்டதாக சில செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து உடனடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி “நான் தலைநகர் கீவ்-வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ அவ்வளவு நாள் நான் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்” என தெரிவித்துள்ளார்.