போர் தடத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தனியாக பயணம்! – சிறுவனால் அதிர்ந்த உலகம்!

செவ்வாய், 8 மார்ச் 2022 (13:59 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் 11 வயது சிறுவன் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தனியாக பயணித்து எல்லையை அடைந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 13 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர்.

உக்ரைனின் ஷப்ரிஹியா நகரில் உள்ள அணுமின் நிலையத்தை ரஷ்யா தாக்கி வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த யூலியா என்ற பெண் தன் உறவினர்களை தனியாக விட்டு செல்ல முடியாது என்பதால் உதவி கேட்டு தனது மகன் கையில் தொலைபேசி உள்ளிட்ட விவரங்களை எழுதி எல்லை தாண்டி செல்ல ரயில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

11 வயது சிறுவன் ரயில் மற்றும் கால்நடையாக தொடர்ந்து 1000 கிலோ மீட்டர்கள் பயணித்து உக்ரைன் எல்லை நாடான ஸ்லோவேகியாவை வந்தடைந்துள்ளான். ஸ்லோவேகியாவிற்குள் நுழைந்த அந்த சிறுவனை அதிகாரிகள் வரவேற்றதோடு அவனது அம்மாவையும், உறவினர்களையும் மீட்டு அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்