இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (14:40 IST)
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறி அடித்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவில் இன்று காலை இரண்டு முறை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் என்ற அளவில் பதிவானதாகவும் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து  வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமான குலுங்கியதாகவும், இதனை அடுத்து தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் 5.8 ரிக்டர் என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் குறித்த சேதம் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்