டுவிட்டரில் இனி இவர்கள் மட்டுமே Poll-களில் வாக்களிக்க முடியும்: எலான் மஸ்க் அதிரடி

செவ்வாய், 28 மார்ச் 2023 (13:12 IST)
ட்விட்டரில் இனிமேல் வெரிஃபைடு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே Poll-களில் வாக்களிக்க முடியும் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எலான் மஸ்க் 44 பில்லியன் கொடுத்து வாங்கினார் என்பதும், அதன் பின் அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
குறிப்பாக ட்விட்டரில் வெரிஃபைடு என்பதை பணம் ஆக்கினார் என்பதும், பணம் கட்டினால் மட்டுமே வெரிஃபைடு  அக்கவுண்ட் தரப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு போன்களுக்கு மாதம் 650 ரூபாயும் ஐபோன்களுக்கு மாதம் 900 என வெரிஃபைடு கணக்கு இருக்கு செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வெரிஃபைடு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே Poll-களில் இனி வாக்களிக்க முடியும் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த விதி ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்